குகன்
WORKS
2
READS
76,057
LIKES
1,213

Biography  

Author Since:    

Summary:

ஹீரோவே சொந்த செலவில் படம் எடுத்து நாயகனாக நடிப்பது போல் தான் என் சொந்த செலவில் முதல் இரண்டு புத்தகங்களை வெளியிட்டேன். மற்ற எழுத்தாளர்களைப் போல் நூலக ஆணைக்காகவும், புத்தகம் விற்பனையாகவில்லை என்ற புலம்பலோடு இருந்தேன். என் நண்பர்கள் சிலர் சிற்றதழ், கருத்தரங்கள், நூல் வெளியீடு என்ற தங்கள் பணத்தை இலக்கியத்தில் செலவு செய்து, பல கஷ்டங்களுக்கு நடுவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். நானும், அவர்களைப் போல் இலக்கிய அமைப்போ, சிற்றிதழோ தொடங்க விரும்பவில்லை. அவர்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் புத்தக விற்பனையாளராக ஆகலாம் என்ற முடிவில் நாகரத்னா பதிப்பகமும், வீ கேன் புக்ஸூம் தொடங்கியிருக்கிறேன். யாரை வேண்டுமானாலும் புத்தகம் வாங்க வைக்கலாம். ஆனால், புத்தகம் படிக்க வைப்பது முடியாத காரியம். நாகரத்னா பதிப்பகம் மூலம் புத்தகம் வெளியிடுவதோடு மட்டும் இல்லாமல், வீ கேன் புக்ஸ் (We Can Books) என்ற பெயரில் பல வாசகர்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்த்து, படிக்கும் ஆர்வத்தை தூண்டி வருகிறோம். செப்டம்பர், 2012 முதல், www.wecanshopping.com என்ற இணைய புத்தக அங்காடியை தொடங்கி, வெற்றிக்கரமாக நடத்தி வருகிறோம். இதுவரை இலக்கியம், சுயமுன்னேற்றம் போன்ற பிரிவில் நாகரத்னா பதிப்பகம் புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. மேலும், வரலாறு, அரசியல், அறிவியல் போன்ற பிரிவுகள் புத்தகங்களை வெளியிட உள்ளோம்.  


Prabhakaran

0 Followers
contact@pratilipi.com
+91 9789316700
Follow us on Social Media
     

About Us
Work With Us
Privacy Policy
Terms
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.